நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கி நகைச்சுவை திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் நடிகர் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சந்தானம் தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், தில்லுக்குதுட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்குதுட்டு பார்ட் 2 என வரிசையாக திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 

தற்போது தமிழ் சினிமாவில் முழுக்கமுழுக்க கதாநாயகனாக மட்டுமே நடித்து வரும் நடிகர் சந்தானம் A1, டக்கால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ் என அடுத்தடுத்து திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அடுத்ததாக நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் டிக்கிலோனா. டிக்கிலோனா திரைப்படத்தில் நடிக்க சந்தானத்துடன் இணைந்து நடிகை அனகா  மற்றும் ஷிரின் கஞ்ச்வளா கதாநாயகிகளாக நடிக்க KJS ஸ்டூடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. 

நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு ,மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கலக்கும் டிக்கிலோனா திரைப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சயின்ஸ் பிக்சன் காமெடி திரைப்படமாக வெளிவர உள்ள டிக்கிலோனா திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். 

தமிழ் சினிமாவில் சவாரி, பாலூன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராக பணியாற்றிய கார்த்திக் யோகி நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று கார்த்திக் யோகிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இயக்குனர் கார்த்திக் யோகிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.கார்த்திக் யோகியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthik yogi (@karthikyogi)