கடந்த சில ஆண்டுகளாக நிறைய துணை நடிகர்களை  ரசித்துக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறது தமிழ் திரையுலகம்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நகைச்சுவை ,  துணை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும்  தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் ரமேஷ் திலக்.

ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளுக்கு தோன்றிய ரமேஷ் திலக், சூதுகவ்வும் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு மிகப் பிரபலம் அடைந்தார்.தொடர்ந்து நேரம், வாயை மூடி பேசவும், டிமான்டி காலனி என தொடர் வெற்றிப் படங்களில் நடித்து வந்த ரமேஷ் திலக் காக்கா முட்டை ஆரஞ்சுமிட்டாய் திரைப்படங்களின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி, காலா நடிகர் அஜித் குமாரின் வேதாளம் விசுவாசம் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து வந்த ரமேஷ் திலக் கடைசியாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் வெளிவர உள்ள லாபம் திரைப்படத்திலும் நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரமேஷ் திலக் நவலக்ஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த குதூகலத்தில் இருந்த ரமேஷ் திலக் இன்று தனது மகனுக்கு பெயர் சூட்டியுள்ளார். தனது செல்ல மகனுக்கு மாயன் ராணா என மாஸாக பெயர் வைத்துள்ளார் நடிகர் ரமேஷ் திலக். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் ரமேஷ் திலக் “தலைவன் மாயன் ராணாவை அறிமுகப்படுத்துகிறோம்” என மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து மகன் மற்றும் மனைவியோடு இருக்கும் அழகான  புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நடிகர் ரமேஷ் திலக் உடன் க்யூட்டான மகன் மாயன் ராணா இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.