மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஐயப்பனும் கோஷியும் மற்றும் கோல்ட் கேஸ் திரைப்படங்கள் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் தற்போது பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் தயாராகி இருக்கும் ஜண கண மண, பிரம்மம் மற்றும் தீர்ப்பு உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் கடுவா மற்றும் ப்ரோ டாடி ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்ததாக பிரித்திவிராஜ் இன் புதிய திரைப்படமாக வெளிவர உள்ள திரைப்படம் குருதி

பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனமான பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் குருதி திரைப்படத்தை அனிஷ் பல்லயல் எழுத இயக்குனர் மனு வாரியர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 

த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் நடிகர் பிரித்விராஜின் குருதி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகிறது. இந்நிலையில் தற்போது குருதி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மிரட்டலான இந்த டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.