மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் பிரித்திவிராஜ் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோல்ட் கேஸ். ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த கோல்ட் கேஸ் திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது

தொடர்ந்து நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் தயாராகி இருக்கும் ஜண கண மண, பிரம்மம் மற்றும் தீர்ப்பு உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் கடுவா மற்றும் ப்ரோ டாடி ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிருத்விராஜின் புதிய திரைப்படமாக அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் குருதி

பிரித்விராஜின் பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் குருதி திரைப்படத்தை அனிஷ் பல்லயல் எழுத இயக்குனர் மனு வாரியர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 

குருதி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. முன்னதாக வெளியான குருதி படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது குருதி திரைப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. த்ரில்லான அந்த வீடியோ இதோ...