கடந்த 2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ். அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்து அவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். 

Prithviraj

2010-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் அவர் நடித்த ராவணன் திரைப்படம் மிகப்பெரிய பெயரை வாங்கித்தந்தது. மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் லூசிஃபர் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

Prithviraj

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் சூப்பர் ஹிட்டானது. இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடலை பகிர்ந்து தமிழில் மீண்டும் நடிக்க வாருங்கள் என்று கேட்க, கண்டிப்பாக தமிழில் நடிப்பேன். நல்ல கதைகள் கிடைக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.