சீரியல் உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர் பிரஜின். காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி போன்ற வெற்றி தொடர்களால் ரசிகர்களை ஈர்த்தவர். நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கிய பிரஜின் பழைய வண்ணாரப்பேட்டை, சுற்றுலா, லவ் ஆக்ஷன் ட்ராமா, ஆண் தேவதை போன்ற படங்களில் முதன்மை ரோலில் நடித்துள்ளார். 

Prajin

பிரபல நடிகை சான்ட்ராவை திருமணம் செய்த பிரஜினுக்கு, மித்ரா - ருத்ரா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரஜின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அப்பதிவு வைரலாகி வருகிறது. 

Prajin

என்னுடைய ஏஞ்சல்களுக்கு 1 வயதாகிறது. ஒரு தந்தையாக அதீத மகிழ்ச்சியை உணர்கிறேன். வால் பொண்ணுங்க. இவர்களது முகம் தெரியும் ஃபோட்டோவை பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் வெளியிடுகிறேன். கொரோனா வைரஸின் தாக்கத்தால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் பிரஜின்.