தீப்பொறி பறக்க வருகிறது நானியின் 'தசரா' பட டீசர் – அனல் பறக்கும் அறிவிப்பு வீடியோ இதோ..

நானி நடித்த தசரா திரைப்படத்தின் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு -  Nani Dasara movie teaser release date announced | Galatta

தென்னிந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகரில் ஒருவர் நானி. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் 'நான் ஈ' படத்தின் மூலம் அறிமுகமாகி  தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக நானி இருக்கிறார். மேலும் அவரது படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டாலே அதற்கும் தனி ரசிகர்கள் உண்டு.நடிகர் நானி - யின் முந்தைய படங்களான ‘டக் ஜகதீஷ்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ மற்றும் ‘அடடே சுந்தரா’ போன்ற படங்கள் தென்னிந்திய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

ஹாட்ட்ரிக் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் நானி, ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கத்தில் 'தசரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்பார்வை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் முன்னதாக நிலக்கரி சுரங்கம் சார்ந்த கதையாக இப்படம் வரக்கூடும் என்ற தகவல் வெளியானது.  சுதாகர் செருகுரி தயாரிப்பில் நானி உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி,சாய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'மாநகரம்' 'கைதி', 'மாஸ்டர்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சத்யன் சூர்யன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் தசரா திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இவர் இசையில் முன்னதாக வெளிவந்த 'தாம் தூம் கூத்து' பாடல் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பட்டையை கிளப்பியது. புழுதி காட்டில் அழுக்குடன் இருக்கும் கூட்டத்துடன் நானியின் தோற்றமும் ஆட்டமும் அதிகம் பேசப்பட்டது.

மேலும் படம் குறித்து வரும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களுக்கு தனி ஆர்வத்தை எழுப்பியது. படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தசரா திரைப்படத்தின் டீசர் ஜனவரி 30 ம் தேதி வெளியாகவுள்ளது என படத்தின் நாயகன் நானி அவரது டிவிட்டர் பக்கத்தில் சிறப்பு வீடியோவுடன் அறிவித்துள்ளார். தீப்பறக்கும் காட்சியுடன் தேதியை அறிவித்த வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கபட்டு வருகிறது.  

BAANCHETH!#Dasara 🔥 pic.twitter.com/L9U7KMZZIb

— Nani (@NameisNani) January 25, 2023

மேலும் தசாரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி  ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியப் படமாக மார்ச் 30 ம் தேதி வெளியாவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை Miss ஆகாது.. மீண்டும் வருகிறான் ஆளவந்தான்.. – Re Release.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

இந்த முறை Miss ஆகாது.. மீண்டும் வருகிறான் ஆளவந்தான்.. – Re Release.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சினிமா

"30 க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்துள்ளது.." – சிகிச்சைக்கு பின் பிரபல அவெஞ்சர்ஸ் நடிகர் Emotional.. வைரல் பதிவு இதோ..

ஆஸ்காரில் இடம் பிடித்த RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்  – ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் Reaction இதோ! வைரல் பதிவு..
சினிமா

ஆஸ்காரில் இடம் பிடித்த RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் – ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் Reaction இதோ! வைரல் பதிவு..