“என்னால் தான் செல்வராகவன் கஷ்டபட்டார்” மூணார் ரமேஷ் பகிர்ந்து கொண்ட தகவல் – சுவாரஸ்யமான முழு வீடியோ இதோ..

செல்வராகவன் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த மூணார் ரமேஷ் - Actor Munnar Ramesh about Director Selvaraghavan | Galatta

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் உடனே கண்டுகொள்ள கூடிய குணசித்திர நடிகர்களில் மிக முக்கியமானவர் மூணார் ரமேஷ் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றும் இவர் இயக்குனர் பாலுமகேந்திரா  இயக்கத்தில் தனுஷ், பிரியா மணி நடித்த ‘அது ஒரு கனா காலம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன்பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்து வந்தார். இவர் நடிப்பில் வெளியான தலைநகரம், புதுப்பேட்டை, வேட்டைக்காரன், கும்கி, விசாரணை, வடசென்னை ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராகவும் 13 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார் மூணார் ரமேஷ். தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஹரிஷ் கல்யான் நடிப்பில் உருவாகி வரும் ‘டீசல் படத்திலும் யோகி பாபுவின் புதிய படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  நமது கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்ட மூணார் ரமேஷ் அவரது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் இயக்குனர் செல்வராகவன் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கையில்,

"புதுப்பேட்டை படத்தில் நடிக்கும் போது என்னால தான் அவர் கஷ்டப்பட்டார். எனக்கு நடிப்பே வரல.. அந்த கதாபாத்திரம் ரொம்ப வெயிட்டான கதாபாத்திரத்திரம். படத்தின் ஆரம்பத்தில் லேசா நடிச்சிட்டேன். முக்கியமான காட்சியில் நடிக்கும் போது அவர் பார்த்த நுணுக்கங்களெல்லாம் வரல. அவருடைய எழுத்து சரியான முறையில் திரையில் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிற ஆள். அந்த வகையில் நான் அவருக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தேன்." என்றார்.

மேலும் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் குறித்து கேட்கையில், நிச்சயமாக புதுப்பேட்டை இரண்டாம் பாகம் படம் வரும், ரசிகர்கள் அதைதான் அவரிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்” என்றார் மூணார் ரமேஷ்

மேலும் பல சுவாரஸ்யமான தகவலை மூணார் ரமேஷ் நமது பேட்டியில் பகிர்ந்து கொண்ட வீடியோ இதோ. 

சினிமா

"இது இந்திய சினிமாவையே மாற்றும்.." மாரி செல்வராஜின் 'வாழை' படம் குறித்து சந்தோஷ் நாராயணன்.. - சுவாரஸ்மான வீடியோ இதோ..

சாகுந்தலம் படம் எப்படி இருக்கு? சமந்தா பகிர்ந்த First review.. – ரசிகர்களால் வைரலாகும்  பதிவு இதோ..
சினிமா

சாகுந்தலம் படம் எப்படி இருக்கு? சமந்தா பகிர்ந்த First review.. – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

“அடுத்து தளபதி விஜய் படம் தான்..” காயத்ரி ரகுராம் பகிர்ந்த சுவாரஸ்மான தகவல்.. – அட்டகாசமான நேர்காணல் இதோ..
சினிமா

“அடுத்து தளபதி விஜய் படம் தான்..” காயத்ரி ரகுராம் பகிர்ந்த சுவாரஸ்மான தகவல்.. – அட்டகாசமான நேர்காணல் இதோ..