செயின் ஸ்நாட்சிங்கை மையப்படுத்தி இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த மெட்ரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர்  நடிகர் சிரிஷ். தொடர்ந்து இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ரங்குஸ்கி திரைப் படத்திலும் நடித்திருந்தார். த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த ராஜா ரங்குஸ்கி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் மெட்ரோ சிரிஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிஸ்தா திரைப்படத்தில் நடிகர் மெட்ரோ சிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிகை மிருதுளா முரளி அருந்ததி நாயர் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், செந்தில், யோகிபாபு, நமோ நாராயணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் விஜய் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்திருக்கும் பிஸ்தா திரைப்படத்தை ஒன் மேன் புரொடக்ஷன்ஸ் சார்பில் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரிக்க 11:11 புரோடக்சன்ஸ்  சார்பில் 11:11 டாக்டர்.பிரபு திலக் வெளியிடுகிறார். 

நடிகர் மெட்ரோ சிரிஷ், யோகி பாபு, சதீஷ்  இணைந்து கலக்கும் கலகலப்பான திரைப்படமாக தயாராகியிருக்கும் பிஸ்தா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. கலகலப்பான பிஸ்தா படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.