தமிழ் சினிமாவில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்  நடிகர் மஹத் ராகவேந்திரா. தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் மஹத் ராகவேந்திரா  விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன்2 கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார். 

நடிகர் மஹத் ராகவேந்திரா இந்தியாவின் பிரபல மாடல் அழகியான ப்ராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். 2012-ல் MISS EARTH அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ப்ராச்சி மிஸ்ரா மாடலிங் துறையில் ஃபெமினா மிஸ் இந்தியா உட்பட பல பட்டங்களை வென்றுள்ளார்.

பிராச்சி மிஸ்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்தேறியது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் மஹத் ராகவேந்திரா ப்ராச்சி மிஸ்ரா-ன் கன்னங்களிலும் காலிலும் மஞ்சள் பூசும் அழகான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அழகான அந்த வீடியோ காட்சி தற்போது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் என சமூக வலைதளங்களில் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பிராச்சி மிஸ்ரா பிரசவத்திற்கான தேதி நெருங்கி வருவதால் தொடர்ந்து அதற்காக தயாராகும் வகையில் பல உடற்பயிற்சிகளையும் செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.