மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 2வது திரைப்படமான கைதி திரைப்படத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம நடிகரான தளபதி விஜயுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த வரிசையில் கடைசியாக உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு(2022) வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ஆல்டைம் ரெக்கார்டு வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து தயாராகும் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் வெளியானது தளபதி67 அப்டேட்.

தளபதி விஜய் தற்போது தனது 66வது திரைப்படமாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், தனது அடுத்த படமான தளபதி67-ல் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையவுள்ளது சமீபத்தில் உறுதியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வரும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தளபதி 67 திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட் மற்றும் முதற் கட்ட பணிகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் கலையரசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தளபதி67-ன் ருசிகர தகவல் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு மச்சி இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன்… வழக்கம்போல் தளபதி 67 திரைப்படத்தில் நான் இல்லை என சொல்லிவிட்டார்.. அவருடைய யுனிவர்ஸின் அருமையான விஷயங்கள் வெளிவர இருக்கின்றன" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி & விக்ரம் திரைப்படங்கள் ரசிகர்கள் விரும்பும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸுக்குள் இருக்கும் நிலையில் தளபதி 67 திரைப்படமும் அந்த யுனிவர்சில் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 

Met Machi @Dir_Lokesh after a long time …. As usual he said I am not part of his movie #Thalapathy67 #friendslove better things on the way 🔥🔥🔥in his universe 💥💥💥 pic.twitter.com/rW4i7XKXUX

— Kalaiyarasan (@KalaiActor) October 9, 2022