தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜீவா முன்னதாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து இந்த ஆண்டில்(2022) வெளிவந்த திரைப்படம் காஃபி வித் காதல். தொடரந்து இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்த வரலாறு முக்கியம் திரைப்படம் கடைசியாக சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்ததாக இயக்குனர் பொன் குமரன் இயக்கத்தில் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடித்த கோல்மால் திரைப்படம் பக்கா காமெடி என்டர்டெய்ன்மென்ட் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இதனிடையே முதல்முறையாக தொகுப்பாளராகவும் ஆஹா தளத்தில் ஒளிபரப்பாகும் சர்க்கார் வித் ஜீவா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ஜீவா உடன் இணைந்து நடிகை தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவில், அருள்.E.சித்தார்த் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.K.பிரசன்னா இசையமைக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹாரர் படமான மாயா, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம், எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். 

விரைவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ள படக்குழுவினர் தற்போது படப்பூஜை நடைபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படப்பூஜை புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ...
 

Pooja of our next #ProductionNo13 happened today :)

Need all your love and blessings ❤️@JiivaOfficial @actortanya @nivaskprasanna @gokulbenoy @editorsiddharth @gManikandan174 @rthanga @prabhu_sr

Shoot Starts Soon. pic.twitter.com/0mF6cHeC62

— Potential Studios LLP (@Potential_st) December 14, 2022