தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028  மற்றும் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தார். தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகராக உயர்ந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, குற்றமே குற்றம் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி-யின் தயாரிப்பில் இயக்குனர் பத்ரி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் என வரிசையாக திரைப்படங்கள் வெளிவர உள்ளன.

அந்தவகையில் அடுத்ததாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் சிவ சிவா படத்தின் முக்கிய தகவல் இன்று வெளியாகியுள்ளது. சிவ சிவா திரைப்படத்தை தனது முதல் படமாக லென்டி ஸ்டுடியோ சார்பில்  தயாரிப்பாளர் எஸ்.ஐஸ்வர்யா தயாரிக்கிறார்.

சிவசிவா திரைப்படத்தில் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் . மேலும் காளி வெங்கட் மற்றும் பாலசரவணன்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஜெயின் 30வது திரைப்படமாக தயாராகும் சிவசிவா திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் ஜெய்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய காசிவிசுவநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் சிவசிவா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சிவ சிவா ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரைட்ரெண்டாகும் இந்த ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.