சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் நடிகர் சசிகுமார். தொடர்ந்து நாடோடிகள், போராளி தாரை தப்பட்டை சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பேட்டை திரைப்படத்திலும் தனுஷ் உடன் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது தனது புதிய திரைப்படத்தை பூஜையோடு தொடங்கியிருக்கிறார் நடிகர் சசிக்குமார். நடிகர் சூர்யா நடித்த சிங்கம் 2 நடிகர் கார்த்தி நடித்த தேவ் நடிகை திரிஷாவின் மோகினி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். 

அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு கைதி, கேஜிஎஃப் படங்களின் ஸ்டன்ட் இயக்குனர்களான அன்பறிவு சகோதரர்கள் இப்படத்திற்கு ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகிறார்கள். அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இரும்புத்திரை & ஹீரோ திரைப்படங்களின் இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் படத்தை தயாரிக்கிறது. 

இன்னும் பெயரிடப்படாத நடிகர் சசிக்குமார் இந்த புதிய திரைப்படத்தில் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல போட்டியாளர் சம்யுக்தா சண்முகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விரைவில்  இத்திரைப்படத்தின் டைட்டில் மற்றும் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  சசிகுமார் நடிப்பில் ராஜவம்சம் , எம்ஜிஆர் மகன் , பகைவனுக்கு அருள்வாய் மற்றும் கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகிவருகின்றன.