புதிய தொடரில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அரண்மனை கிளி பிரபலம் !
By Aravind Selvam | Galatta | December 08, 2020 14:08 PM IST
வித்தியாசம் என்ற பெயருக்கு மறுவார்த்தையாக தமிழ் தொலைக்காட்சிகளில் வலம் வருவது விஜய் டிவி.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.சிவகார்த்திகேயன்,சந்தா
மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.பிக்பாஸ்,ஜோடி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களையும் புதுமையான பல நிகழ்ச்சிகளையும் தற்போது வரை கொடுத்து வருகிறது விஜய் டிவி.விஜய் டிவியின் மற்றுமொரு முக்கிய அம்சம் தொடர்கள்.
விஜய் டிவி பல வெற்றி தொடர்களை தந்து ரசிகர்களிடம் விஜய் டிவி தொடர்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.தற்போதும் விஜய் டிவியின் தொடர்கள் TRP-யில் கலக்கி வருகின்றன.இதில் புதிதாக இணையவுள்ள தொடர் காற்றுக்கென்ன வேலி.
இந்த தொடரின் ப்ரோமோ வீடீயோவை விஜய் டிவி சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.இந்த சீரியல் பெங்காலியில் சூப்பர்ஹிட் அடித்த mohor என்ற சீரியலின் ரீமேக் என்பது இந்த ப்ரோமோவை வைத்து தெரியவந்துள்ளது.தற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.இந்த தொடரின் நாயகனாக அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் ராஜு நடிக்கிறார்.
Popular Singer Sunitha to get married soon - announces her engagement in style!
08/12/2020 01:27 PM
Pa Ranjith officially announces his next film - know who is the hero?
08/12/2020 12:49 PM
Thalapathy Vijay and Suriya's massive records - fans celebrate in delight!
08/12/2020 11:17 AM