வயதான தோற்றத்தில் நடிகர் சந்திரமௌலி ! வைரலாகும் புகைப்படம்
By Sakthi Priyan | Galatta | May 07, 2020 15:16 PM IST

கடந்த 2014-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கயல். இப்படத்தின் மூலம் ஹீரோவோக கால்பதித்தவர் நடிகர் சந்திரமௌலி. இதைத்தொடர்ந்து ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவை திருமணம் செய்துள்ளார் சந்திரமௌலி. இந்த அழகான தம்பதிக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நடிகர் சந்திரமௌலி தான் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2020 ஆண்டின் இறுதி இப்படித் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அடையாளமே தெரியவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இவர் நடித்த பார்ட்டி திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ளதால், பல திரைப்பிரபலங்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.