சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் அவர்கள் தயாரிக்கும் அண்ணாத்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகைகள் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சதீஷ், சூரி, வேல ராமமூர்த்தி, ஜாக்கி ஷெராப், ஜார்ஜ் மரியான், பாலா என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி இமான் இசை அமைக்கும் அண்ணாத்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 4ஆம் தேதி அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் அன்பு, காதல் கிசுகிசு, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பாலா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த படப்பிடிப்பில்   கலந்து கொண்டுள்ளேன் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது மிகப் பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார். 
ஒருபுறம் இறுதிக்கட்டத்தில் அண்ணா இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க மறுபுறம் விறுவிறுப்பாக அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.