தளபதி விஜயின் லியோ படத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் நடிகர்... ரசிகர்களை உற்சாகப்படுத்திய ருசிகர தகவல் இதோ!

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைந்த பாபு ஆண்டனி,actor babu antony joined with thalapathy vijay in leo movie | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் தனது அடுத்த படமான தளபதி 67 படத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்க, லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்றும், லியோ திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

லியோ திரைப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன் பகுதி படப்பிடிப்பை இயக்குனர் மிஷ்கின் நிறைவு செய்த நிலையில்   பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த , தென்னிந்திய சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் தற்போது இணைந்துள்ளார். புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஆல் டைம் ரெக்கார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. 

தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் பாபு ஆண்டனி தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குனர் "லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் & சஞ்சய் தத் ஆகியோரோடு லியோ திரைப்படத்தில் படப்பிடிப்பிற்காக புறப்பட்டு இருக்கிறேன். அப்போது டெல்லி ஏர்போர்ட்டில் நமது IMவிஜயன் அவர்களை சந்திக்க நேர்ந்தது." என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்தியாவின் மிக முக்கிய கால்பந்து விளையாட்டு வீரரான IMவிஜயன் அவர்கள் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக மிரட்டிய நடிகர் பாபு ஆண்டனி தற்போது தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பாபு ஆண்டனி அந்த பதிவு இதோ…

silambarasan tr new look for str48 photo with design periyasamy

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் ஹாரர் காமெடி சரவெடி கோஸ்டி … கவனம் ஈர்க்கும் கலகலப்பான ட்ரெய்லர் இதோ!
சினிமா

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் ஹாரர் காமெடி சரவெடி கோஸ்டி … கவனம் ஈர்க்கும் கலகலப்பான ட்ரெய்லர் இதோ!

பொன்னியின் செல்வன் 2 அட்டகாசமான முதல் பாடல் குறித்த அறிவிப்பு...
சினிமா

பொன்னியின் செல்வன் 2 அட்டகாசமான முதல் பாடல் குறித்த அறிவிப்பு... "குந்தவை" திரிஷாவின் இதுவரை பார்த்திராத பிரம்மிப்பான வீடியோ இதோ!

சினிமா

"உலகநாயகன் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்TR!"- STR48 இயக்குனர் இவர் தான்... அட்டகாசமான அறிவிப்போடு வந்த மிரட்டலான வீடியோ இதோ!