கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் படமாக்க வெகு நாட்களாக முயற்சித்து வருகிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், அமிதா பச்சன், பார்த்திபன், ஜெயராம் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இதில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ponniyinselvan

ponniyinselvan

சமீபத்தில் எழுத்தாளர் குமரவேல் படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்ததாக தெரிவித்திருந்தார். படத்தில் 12 பாடல்கள் இருக்கக்கூடும் என்ற செய்தி தெரியவந்தது. வரலாற்று கதை நிறைந்த படமான இதில் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் முதல் துவங்கவுள்ளதாக தெரிகிறது. மேலும் தாய்லாந்தில் உள்ள வணப்பகுதிகளில் ஷூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

ashwinkakamanu

ashwinkakamanu

தற்போது நடிகர் அஸ்வின் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தெரியவந்தது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் கூட்டத்தில் ஒருவராக தான் இருந்ததை நினைவு கூர்ந்தார் அஸ்வின்.