இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்து தமிழில் மெகா ஹிட்டான திரைப்படம் “சூது கவ்வும்”.சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அசோக்செல்வன். தொடர்ந்து  நடிகர் அசோக்செல்வன் நடித்த “தெகிடி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

கடைசியாக நடிகர் அசோக்செல்வன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த “ஓ மை கடவுளே” திரைப்படம்  ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நடிகர் அசோக்செல்வன் நடிக்கும் அடுத்த திரைப்படமான “நிண்ணிலா நிண்ணிலா” என்ற தெலுங்கு திரைப்படம் ZEE 5 OTT தளத்தில் நேரடியாக வெளியாகிறது.இத்திரைப்படம் தமிழில் தீனி என்ற பெயரில் வெளியாகவுள்ளது. 

இதில் நடிகர் அசோக்செல்வன் உடன் இணைந்து நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகை ரித்து வர்மா இணைந்து நடித்துள்ளனர். பிரபல திரைக்கதையாசிரியர் Ani.I.V.சசி திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் அசோக் செல்வன் மற்றும் ப்ரியா ஆனந்த் இருவரையும் வைத்து இயக்குனர் Ani.I.V.சசி  இயக்கிய “மாயா” என்ற குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 

ஒன்றாக தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ரான் எதான் யோஹன்  இசையமைக்க எழுதி இயக்கி எடிட் செய்துள்ளார். இயக்குனர் Ani.I.Vசசி . பல சர்வதேச குறும்ப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ள இந்த மாயா குறும்படம்  நியூ டெல்லி குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்க்கான  விருது பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. இப்போது வெளியாகியுள்ள இந்த மாயா திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.