தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நடிகரான அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. கடைசியாக நடிகர் அசோக்செல்வன் நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சூப்பர்ஹிட்டானது. அடுத்ததாக வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். 

PRODUCTION #NO5 என குறிப்பிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். நடிகர் அசோக்செல்வனுடன் இணைந்து நடிகைகள் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா மற்றும் சிவாத்மிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 3 கதாநாயகிகள் நடிக்கும் ரொமான்டிக் காதல் திரைப்படமாக உருவாக உள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கார்த்திக் எழுதி இயக்குகிறார்.
 
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அபர்ணா முரளியின் அடுத்த திரைப்படத்தில் தற்போது அசோக் செல்வனுடன் இத்திரைப்படத்தில் நடிக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கதாநாயகி ரித்து வர்மா இத்திரைப்படத்தில் இணைந்திருப்பது திரைப்படத்தின் மீதான கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்ததாக இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை சிவாத்மிகா பிரபல தெலுங்கு நடிகர் Dr.ராஜசேகரன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அசோக்செல்வனுடன் இணைந்து மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்கும் ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில் திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.