தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஆர்யா கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் டெடி.நடிகர் ஜெயம் ரவி நடித்த மிருதன் மற்றும்  டிக்...டிக்... டிக்... உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் டெடி படத்தை இயக்கியிருந்தார். 

தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு அளித்துவரும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனின்  ரெடி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது . ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த டெடி திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். 

பிரபல ஒளிப்பதிவாளரான S.யுவா ஒளிப்பதிவு செய்த டெடி பட்சத்தில் நடிகர் ஆர்யா உடன் இணைந்து நடிகை சாயிஷா கதாநாயகியாக நடிக்க நகைச்சுவை நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி டெடி திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக வெளியான டெடி திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனையடுத்து தற்போது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-இல் வெளியானதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான டெடி திரைப்படம் அதிக டிவிஆர் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை தற்போது அடைந்துள்ளது. 11.9 டிவிஆர் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.