அரவிந்த் சுவாமியின் விறுவிறுப்பான வணங்காமுடி டீசர் இதோ!!
By Anand S | Galatta | August 03, 2021 19:53 PM IST

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான நடிகர் அரவிந்த் சுவாமி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகும் நவரசா வெப்சீரிஸில் ரௌத்திரம் என்னும் எபிசோடை இயக்கியுள்ளார். மேலும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ப்ராஜெக்ட் அக்னி எபிசோடிலும் நடித்துள்ளார்.
நடிகர் அரவிந்த் சுவாமி நடிப்பில் நரகாசுரன் மற்றும் தலைவி ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் மறைந்த முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக தயாராகியிருக்கும் தலைவி படத்தில், புரட்சி தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, தல அஜித் குமார் நடித்த அமராவதி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த கர்ணா, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் அரவிந்த் சுவாமி இணைந்து நடித்த புதையல், நான் அவன் இல்லை என தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் தயாராகியுள்ள வணங்காமுடி இத்திரைப்படத்தில் அரவிந்த்சுவாமி கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் M.R.கணேஷ் தயாரிப்பில், நடிகர் அரவிந்த் சுவாமி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வணங்காமுடி திரைப்படத்தில் சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் வணங்காமுடி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் இந்த டீசரை வெளியிட்டார். காவல்துறை அதிகாரியாக அரவிந்த் சுவாமி நடித்திருக்கும் மிரட்டலான வணங்காமுடி டீசர் இதோ...
Watch the interesting teaser of Arvind Swami's Vanangamudi here!
03/08/2021 06:46 PM
Mysskin's Pisasu 2 First Look Poster Released - looks intense and eerie!
03/08/2021 06:15 PM