தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் நடிகர் அரவிந்த்சுவாமி இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த தளபதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் அரவிந்த்சாமி தனி ஒருவன் & போகன்  உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக ஒரு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கள்ளபார்ட் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அரவிந்த் சுவாமி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வணங்காமுடி திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் வணங்காமுடி திரைப்படத்தை இயக்குனர் செல்வா எழுதி இயக்கியுள்ளார். 

வணங்காமுடி படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி உடன் ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். வணங்காமுடி  படத்தின் டீசர் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் அரவிந்த் சுவாமி, இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் நவரசா ஆன்தாலஜி வெப்சீரிஸில் ரௌத்ரம் என்னும் எபிசோடை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவரசா வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வெளியாகிறது.