இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தில்  அன்பு என்ற கதாபாத்திரத்தில் தனது மிரட்டும் குரலாலும் நடிப்பாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நடிகர் அர்ஜுன் தாஸ். மிடுக்கான உடல்மொழியும் மிரட்டும் குரலும் கூரான பார்வையும் என தமிழ் சினிமாவில் மிகவும் அழுத்தமாகவே  அறிமுகமானார் திரு.அர்ஜுன் தாஸ். 

தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் தாஸ் என்னும்  கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். இயக்குனர் அட்லீயின் தயாரிப்பில் உருவான அந்தகாரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்நிலையில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ஒரு புதிய ஆல்பம் பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. 

“போட்டும் போகட்டுமே” என்ற  இந்த புதிய ஆல்பம் பாடலில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து லாவண்யா திருப்பதி நடித்துள்ளார். திங்க் மியூசிக்  இந்தியா நிறுவனம் தயாரிக்கும் இந்த ஆல்பம் பாடலின் பாடல் வரிகளை விஷ்ணு எழுத  சத்யஜித் ரவி மற்றும் ஜென் மார்டின் இணைந்து இசை அமைத்து இருக்கிறார்கள். 

“போட்டும் போகட்டுமே” ஆல்பம் பாடலை சத்திய நாராயணனும் ஷாம் சசிகுமாரும் இணைந்து பாடியிருக்கின்றனர். மெட்ராஸ் லோகி விக்னேஷ் இயக்கத்தில் வழக்கம்போல அர்ஜுன் தான் மிரட்டும் இந்த ப்ரோமோ தற்போது இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது. வரும் மே 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்பாடல் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.