மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகர் ! கண்ணீரில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | June 21, 2021 20:21 PM IST

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருப்பவர் அமர சிகாமணி.ரமணா,சிவாஜி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் வெற்றி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று கோலங்கள்,தேவயானி ஹீரோயினாக நடித்திருந்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.இந்த தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் அமர சிகாமணி.
இவரது நடிப்பிற்காக கலைமாமணி விருதும் பெற்று சாதனை படைத்திருந்தார் அமர சிகாமணி.பல சூப்பர்ஹிட் பாடல்களை எழுதியும் அசத்தியுள்ளார்.பல ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த இவர் தற்போது இறைவனடி சேர்ந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
74 வயதான இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற சோகமான தகவலை அவரது மகன் மற்றும் சில நண்பர்கள் பகிர்ந்துள்ளனர்.இவருக்கு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் , ரசிகர்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.