சமீபகாலமாக தினசரி தொலைக்காட்சி செய்திகளிலும்  சமூக வலைதளங்களிலும் நிறைய சினிமா பிரபலங்களும் விளையாட்டு, அரசியல் சார்ந்த பிரபலங்களும் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது   காணமுடிகிறது.இசை உலகின்  மன்னனாக இருந்து அவருடைய இனிமையான குரலில் எண்ணற்ற பாடல்களை கொடுத்து நம்  மனங்களை ஆட்சி செய்த திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் , தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான திரு.கே.வி.ஆனந்த் அவர்கள், இயக்குனர் தாமிரா  மற்றும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் திரு.அன்பழகன் அவர்கள் என பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மறைந்தார்கள்.  

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் சில நாட்களுக்கு முன்பு  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில்  பதிவிட்டார். தெலுங்கு சினிமா ரசிகர்களால் செல்லமாக ஸ்டைலிஷ் ஸ்டார் என அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

actor allu arjun thanks his fans for their love and prayers

தெலுங்கு நடிகராக இருந்தாலும் கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள சினிமா ரசிகர்களால் அதிகம் கவனிக்கப் படுகிறார். குறிப்பாக கேரளாவில் இவருக்கு   நிறைய ரசிகர் மன்றங்கள் வைத்து இவரை கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் தெலுங்கு சினிமாவின் ரசிகர்கள் என அனைவரும் அல்லு அர்ஜுன்  உடல்நிலை குறித்து விசாரித்தபடியும் விரைவில் நலம் பெற வேண்டியும் நிறைய பதிவுகளை  பகிர்ந்து வந்தனர்.  அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அர்ஜுன் சற்று முன்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 அதில்-

“அனைவருக்கும் வணக்கம் , நோய் அறிகுறிகள் குறைந்து நான் நலமாக இருக்கிறேன்.

உடல்நிலை நன்றாக தேறி வருகிறது யாரும் கவலைப்பட வேண்டாம்              நான் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டு தான் இருக்கிறேன்

என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும் எனக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” 

என  தெரிவித்துள்ளார்.

 

திரடியான ஆக்ஷன் காட்சிகளிலும் துடிப்பான நடனக் காட்சிகளிலும் ரசிகர்களை  ஈர்த்ததால் அல்லு அர்ஜுன் ஸ்டைலிஷ் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த அல வைகுண்டபுரம்லோ திரைப்படம்  தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாடப்பட்டன. அல்லு அர்ஜுனுடன் இணைந்து பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். 

தமிழில் வெளியான முகமூடி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே , படிப்படியாக தென்னிந்தியாவின் முன்னணி  நடிகையாக வளர்ந்தார்.தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். கோலமாவு கோகிலா டாக்டர் திரைப்படங்களை இயக்கிய நேசன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 திரைப்படத்தில் கதாநாயகியாக   நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி 65 படப்பிடிப்பில் இருந்த பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டு  உடனடியாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.