தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழி திரையுலகிலும் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

மேலும் முதல்முறை தொகுப்பாளராக களமிறங்கிய ஆக்ஷன் கிங் அர்ஜுன் உலகின் மிகப்பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான சர்வைவர் நிகழ்ச்சியின் தமிழ் வடிவமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி சின்னத்திரை வாயிலாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கடைசியாக தமிழில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்த ஆக்சன் கிங் அர்ஜுன் மலையாளத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வெளிவந்த மோகன்லாலின் மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் நடிகர் அர்ஜுன், “எனக்கு கோவில் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேவையான பாதுகாப்பு விதி முறைகளோடு என்னை தனிமைப் படுத்திக் கொண்டேன்… என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்கவும்… நான் நலமாக இருக்கிறேன்… அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்… முகக்கவசம் அணிய மறந்து விடாதீர்கள்!” என தெரிவித்துள்ளார்.
actor action king arjun sarja tested positive for covid 19