இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஆக்‌ஷன். கலவையான விமர்சனத்துடன் திரையரங்குகளில் சீராக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் வியக்கவைக்கும் ஆக்‌ஷன் காட்சியோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லஷ்மி, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

action

action

ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த மாதம் இப்படத்தின் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷால் – சுந்தர் சி கூட்டணியில் 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

vishal aishwaryalakshmi

தற்போது படத்திலிருந்து சொகசா பாடல் வீடியோ வெளியானது. நகுல் அப்யங்கர் பாடிய இந்த பாடல் வரிகளை சந்திர போஸ் எழுதியுள்ளார்.