கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உலகநாயகன் கமல்ஹாசன் பூரண குணமடைந்து மீண்டும் பிக்பாஸில் மாஸ்ஸான என்ட்ரி கொடுத்தார். முன்னதாக பிக்பாஸில் கடந்த வாரத்திற்கு முன்னர், அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்டில் நுழைய பிரபல நடிகர் சஞ்சீவ் மற்றும் நடன இயக்குனர் அமீர் ஆகியோரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக களமிறங்கினர்.

கடந்த வாரம் கேப்டன் தேர்வுக்கான போட்டியில் வெற்றி பெற்ற இமான் அண்ணாச்சியிடம் இருந்து நிரூப் தன்து நாணயத்தின் சக்தியால் கேப்டன் பதவியை தட்டிப் பறிக்க பிக்பாஸில் அதிரடி ஆரம்பித்தது. தொடர்ந்து நடைபெற்ற ப்ரேக்கிங் நியூஸ் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் இரு அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்கள் சரமாரியாக விளையாட அனல் பறக்கும் விவாதங்கள் வெடித்தன.

முன்னதாக நடைபெற்ற இந்த வார Eviction-க்கான நாமினேஷன் ப்ராசசில் ராஜு, பிரியங்கா, தாமரைச்செல்வி, பாவனி, இமான் அண்ணாச்சி, சிபி, அக்ஷரா, வருண், அபிநய் மற்றும் அபிஷேக் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் இருந்து நேற்று (டிசம்பர் 4) ராஜு முதல் ஆளாக காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்றைய (டிசம்பர் 5) நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக காப்பாற்றபட கடைசியாக வருண், அபிநவ் மற்றும் அபிஷேக் மூவரும் கமல்ஹாசனின் பதிலுக்காக காத்திருக்க, மக்களின் தீர்ப்பாக அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இன்றைய நிகழ்ச்சியில் அபிஷேக ராஜா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது ஒளிபரப்பாகும்.