ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 5. இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். முதல் வாரம் மிகவும் கலகலப்பாகவும் சில நெகழ்ச்சியான கதைகளோடும் கடந்தது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 2-வது வாரத்தின் முதல் நாளே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் தேர்வுக்கான  போட்டி மற்றும் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. 

ஆரவாரமாக நடைபெற்ற கேப்டன் தேர்வுக்கான  போட்டியில் தாமரைச்செல்வி வெற்றி பெற்று தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.  இதனையடுத்து நடைபெற்ற நாமினேஷன் நடைபெற்றது. இதில் இந்த வார கேப்டனான தாமரைச்செல்வியை யாரும் நாமினேட் செய்ய முடியாது. தொடர்ந்து நாமினேஷன் முடிவடைந்து எவிக்சனுக்கு  தேர்வானவர்களின் பட்டியல் வெளியானது.

தாமரைச்செல்வி மற்றும் பாவனியைத் தவிர மற்ற 15 போட்டியாளர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.  யார்.. இந்த வாரம் வெளியேறுவார்? என மக்கள் முடிவு செய்யப் போகிறார்கள். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது. இதில் யூ ட்யூபர் அபிஷேக் ராஜா மற்ற போட்டியாளர் ரிவ்யூ செய்கிறார். அதில் நாதியா சங்கை இந்த சீசனின் வனிதா என அவர் குறிப்பிடுகிறார். அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.