விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை 3 வாரங்களை கடந்து உள்ளது. முன்னதாக முதல்வாரத்தில் நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறினார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்ற வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டார். 

தொடர்ந்து 3-வது வாரத்தின் எலிமினேஷனுக்கு அபிஷேக், பாவனி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னபொண்ணு, அபினய், அக்ஷரா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.மேலும் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் 5 நாணயங்களை கைப்பற்றிய போட்டியாளர்களுக்கு சிறப்பு சலுகையாக Eviction-லிருந்து தன்னையோ அல்லது தான் விரும்பும் ஒரு நபரையோ காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தலைவர் பதவியை தட்டிப் பறிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி, இசைவாணி, அக்ஷரா மற்றும் பாவனி ஆகியோர் காப்பாற்றபட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த வாரத்தில் மாற்றி மாற்றி பேசி அபத்தமான விஷயங்களை செய்த பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகியோரை தனது கேள்விகளால் மடக்கினார் உலகநாயகன்.

கட்டாயம் இந்த வாரம் அபிஷேக் ராஜா வெளியேற்றப்படுவார் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு சரியானது. பிக்பாஸ் வீட்டிலுள்ள போடடியாளர்களுக்கு மட்டுமல்லாமல் பார்ப்பவர்களுக்கும் மிகவும் அசௌகரியம் தரும் விதமாக நடந்து கொண்ட அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இசைக்கு ராஜா வெளியேற்றப்பட்டது ஒளிபரப்பாகும்.