உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக 2 வாரத்தை கடந்துள்ளது. பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5-ன் முதல் வாரத்திலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறினார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2-வது வாரத்தின் தொடக்கத்தில் முதல் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. இதில் பாவனி மற்றும் தாமரைச்செல்வி தவிர மற்ற 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டார்கள். முதல் எவிக்சனில் இவர்களில் நேற்று (அக்டோபர் 17) நாடியா சாங் எலிமினேட் செய்யப்பட்டார்.

தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2-வது நாமினேஷன் ப்ராசஸ் இன்று நடைபெறுகிறது. முன்னதாக அனல்பறக்கும் நாமினேஷன் ப்ராசஸ் ப்ரோமோ வீடியோ வெளியானது. அடுத்து தலைவர் போட்டியில் ராஜு, பாவனி, சிபி மற்றும் இசைவாணி போட்டியிடுவதும் அபிஷேக் & நிரூப் பெண் வேடமணிந்து அவர்களை சிரிக்கவைக்க முயற்சி செய்யும் கலகலப்பான ப்ரோமோ வெளியானது.

இந்நிலையில் சற்று முன் வெளியான 3-வது புரோமோ வீடியோவில் அபிஷேக் மற்றும் வருண் ஆகியோர் சிரிக்கவைப்பதை தாண்டி அவர்களை கோபப்படுத்தும் விதமாக ஏதோ முயற்சிக்க, இமான் அண்ணாச்சி அதை தட்டிக் கேட்கும் விதமாக அபிஷேக்கை, “பெரிய புத்திசாலி மாதிரி பேசாத” என்று பேசும் அதிரடியான ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.