தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருபவர் சுஜு வாசன்.விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜு வாசன்.

நடிகையாக மட்டுமல்லாமல் தனது படிப்பிற்கு ஏற்றார் போல விதவிதமான காஸ்டியூம்களை வடிவமைத்து அசத்துவார் சுஜுவாசன்.அடுத்ததாக கலர்ஸ் தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று வரும் அபி டெய்லர் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் முக்கிய வில்லியாக நடித்து அசத்தவுள்ளார் சுஜுவாசன்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் சுஜு தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.இவரது விதியசமான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.இவர் தனது நெருங்கிய தோழியுடன் இணைந்து நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் நீங்கள் ஓரினசேர்கையா என்று கேட்டுள்ளார் இதனை பார்த்து கடுப்பான சுஜுவாசன் என்ன ஒரு முட்டாள்தனமான கேள்வி இது, ஒரு பொண்ணோட வெளிய போன உடனே இப்படி பேசுறீங்க , என் Friend கூட வெளியேபோக கூடாதா , பையனோட வெளியே போனாலும் பையனோட சுத்துறானு சொல்லுவீங்க,நான் போடுற ஸ்டேட்டஸ் பிடிச்சா பாருங்க இல்லாட்டி பிளாக் பண்ணிருங்க ,சம்மந்தமே இல்லாமல் இந்த மாதிரி எதுவும் பேசாதீங்க என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

abhi tailor serial actress suju vasan strong reply to a netizen vulgar statement