2010-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை வெளியான நேரத்தில் பெறாமல் இருந்தாலும் பின்னர் பலரும் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வந்தனர்.

கார்த்தி ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ஆண்ட்ரியா,ரீமா சென்,பார்த்திபன்,அழகம் பெருமாள் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாண்டஸி கலந்த வரலாற்று படமாக ரசிகர்களால் இந்த படம் சில வருடங்களுக்கு பிறகு பெரிதும் கொண்டாடப்பட்டது.

இந்த படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க ரசிகர்கள் செல்வராகவனுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.தற்போது 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பையும் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் ஒரு வருடம் நடைபெறும் என்றும் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் தயாரிப்பாளர்,இசையமைப்பாளர் மற்றும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனுஷ் மற்றும் செல்வராகவனுடன் ஜி.வி.பிரகாஷ் இருந்தார்,ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஜீ.வி இசையமைத்த நிலையில் மீண்டும் ஜீ.வியே இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிகிறது.

தனுஷ்-செல்வராகவன் இயக்கத்தில் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் முதலில் நடித்து முடித்து விட்டு இந்த பட வேலைகளை தொடங்குவார் என்று தெரிகிறது.இந்த படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.