தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் நான்காம் சீசனில் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றவர் நடிகர் ஆரி அர்ஜுனன். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய நிகழ்சியாக இருந்தது. அந்த போக்கை முற்றிலும் இந்த சீசன் மாற்றி அமைத்தது. மேலும், காதல், கிளாமருக்கு விடை கொடுத்து நேர்மையை விதைத்து அசத்தி விட்டார் ஆரி.

பாலாஜி முருகதாஸுக்கு ரன்னர் அப் கிடைக்க காரணமே ஆரி அர்ஜுனன் தான். பாலாவிடம் வெளியே தெரிந்த முரட்டுத் தனத்தை மற்றவர்கள் பார்த்த நேரத்தில் அவருக்குள் இருக்கும் நல்லத்தனத்தை பார்த்து, எத்தனை முறை திட்டினாலும், சண்டை போட்டாலும், பாலாவை கடைசியில் மாற்றிக் காட்டி வெற்றி பெற வைத்தது ஆரி தான்.

ஆட்டம் பாட்டத்துடன் தனது வெற்றியை மற்றவர்கள் போல கொண்டாடாமல், அமைதியான முறையில் பலருக்கும் பயன்படும் விதமாக கொண்டாடி வருகிறார் ஆரி. அவரது ரசிகர்கள் இணைந்து குழந்தைகள் காப்பகம் ஒன்றுக்கு அன்னதானம் வழங்கி உள்ளனர். கடவுளை வணங்கி குழந்தைகள் அன்னதானத்தை உண்ணும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும், அந்த காப்பகத்தில் உள்ள ஒட்டுமொத்த குழந்தைகளும் ஒரே குரலாக, வாழ்த்துக்கள் ஆரி அண்ணா.. உங்க நேர்மை தான் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. உங்களை போலவே நேர்மையானவர்களாக நாங்களும் வளர்வோம் என சொல்வதை கேட்பதே தனி அலாதி தான். இது தான் ஆரியின் ரியல் வெற்றி என்று புகழாரம் சூட்டி வருகின்றனர் ரசிகர்கள். 

நடிகர் ஆரி பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் முன்பே ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளையும் சமூக சேவைகளையும் செய்து வந்தார். பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் மற்றும் அதன் மூலம் கிடைத்துள்ள புகழை கொண்டு மேலும் பல்வேறு சமூக சேவைகளை ஆரி செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரி இருக்கும் போதே அவர் நடிப்பில் உருவாகிய பகவான், அலேகா மற்றும் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் உள்ளிட்ட படங்களின் ப்ரோமோஷன் பணிகள் களைகட்டின. மேலும், அவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு வெளியே வந்ததும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.