பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் நடிகர் ஆரவ். சமீபத்தில் இவரது நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படம் வெளியானது. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜபீமா. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. 

yashikaanand raajabheema

நரேஷ் சம்பத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஆரவ், யோகிபாபு, ஆஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஓவியா இந்த படத்தில் கௌர தோற்றத்தில் நடித்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். சதீஷ்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

yogibabu aarav

கும்கி பட பாணியில் யானையுடன் நாயகன் வருவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வெற்றியடைய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம். ட்ரைலர் லிங்க் கீழே உள்ளது.