ராய் லக்ஷ்மி நடிப்பில் வினோ வெங்கடேஷ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் சிண்ட்ரெல்லா. 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன், மமதி சாரி, கல்லூரி வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திகில்-திரில்லர்-கற்பனை கதைக் களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை SSI ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். ராம்மி இப்படத்திற்கான கேமரா வேலைகளை கவனிக்க லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியாகியிருந்தது. கடந்த மார்ச் மாதம் படம் வெளியாகும் என்று நினைத்த நேரத்தில் கொரோனாவால் தடைபட்டு போன படங்களில் சிண்ட்ரெல்லா படமும் ஒன்றாக மாறியுள்ளது. 

இப்படம் குறித்து பேசிய இப்படத்தின் இயக்குனர் வினோ வெங்கடேஷ். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த படம் ராய் லட்சுமி சினிமா வரலாற்றில் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமையும். இந்த படத்தில் அவருக்கு மூன்று கதாபாத்திரங்கள். சென்னை மற்றும் சில வனப்பகுதிகளில் கதைக்களம் நகர்வது போல திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில் படத்தின் ஆலவஞ்சியே பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஜிவி பிரகாஷ் இந்த பாடலை பாடியுள்ளார். கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஹாரர் படத்தில் இப்படி ஒரு இனிமையான பாடலா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். அஸ்வமித்ரா இசையமைத்த இந்த பாடலை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். 

இந்த படத்தை தொடர்ந்து சாக்ஷி கைவசம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 படமும் உள்ளது. இயக்குனர் SA சந்திரசேகர் இயக்கத்தில் துவங்கியுள்ள புதிய ப்ராஜெக்ட்டில் இணைந்தார் சாக்ஷி. சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கும் இந்த ப்ராஜெக்ட் வெப் சீரிஸா அல்லது திரைப்படமா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு சாக்ஷிக்கு சிறந்த ஆண்டு என்றே கூறலாம். 120 hours என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.