இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற இசை ஜாம்பவானாக திகழும் இசைப்புயல் AR.ரஹ்மான் வருகைக்கு பிறகு இந்திய சினிமாவின் இசையில் பெரும் புரட்சியே ஏற்பட்டது என சொல்லலாம். AR.ரஹ்மானின் இசையில் இருக்கும் மேஜிக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களிலும் இதயத்துடிப்பாய் தொடர்கிறது.

இசையமைப்பாளராக பல சிகரங்கள் தொட்ட AR.ரஹ்மான் தொடர்ந்து தயாரிப்பாளராக தயாரித்த 99 சாங்ஸ் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில், தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக AR.ரஹ்மான் இயக்கி தயாரித்திருக்கும் லே மஸ்க் திரைப்படம் விரைவில் ரசிகர்களை மிரள வைக்க தயாராகி வருகிறது.

முன்னதாக கடந்த ஆண்டில்(2022) பார்த்திபனின் இரவின் நிழல், ஃபகத் ஃபாசிலின் மலையன்குஞ்சு, சீயான் விக்ரமின் கோப்ரா, கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் 1 ஆகிய திரைப்படங்களில் AR.ரஹ்மான் ரசிகர்களுக்கு இசை மழையை பொழிந்தார்.

தொடர்ந்து இந்த ஆண்டில்(2023) சிலம்பரசன்.TR - கௌதம் கார்த்திக்கின் பத்து தல, பொன்னியின் செல்வன் 2, சிவகார்த்திகேயனின் அயலான், பிரித்விராஜின் ஆடுஜீவிதம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம், மாரி செல்வராஜின் மாமன்னன், விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் (மௌன படம்) ஆகிய படங்கள் தயாராகி வரும் நிலையில், மீண்டும் மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் KH234 பாடத்திற்கும் AR.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இசைப்புயல் AR.ரஹ்மான் தனது 55 வது பிறந்த நாளை இன்று (ஜனவரி 6) கொண்டாடுகிறார்.AR.ரஹ்மான் அவர்களுக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது உலகெங்கும் உள்ள தமிழர்களும் இசை பிரியர்களும் முன்னணி பிரபலங்களும் AR.ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், அவரது இளைய மகன் அமீன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது எல்லாமாய் இருப்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்களை எனது தந்தையாகவும் ஆசிரியராகவும் பெற்றது எனது ஆசீர்வாதம், Love You So Much EPI ❤” எனக் குறிப்பிட்டு AR.ரஹ்மானுடன் குழந்தையாய் இருக்கும்போது தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்போது இருக்கும் ஒரு புகைப்படத்தையும் அமீன் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…

Happy birthday to my everything, blessed to have you as my father and my teacher, love you so much
EPI ❤️ pic.twitter.com/pQ2l2S2y9e

— A.R.Ameen (@arrameen) January 6, 2023