கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தற்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.தமிழின் முதல் Prison Break படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

Karthi Kaithi Release on Sept 27 Lokesh kanagaraj

Karthi Kaithi Release on Sept 27 Lokesh kanagaraj

Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அஞ்சாதே நரேன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Karthi Kaithi Release on Sept 27 Lokesh kanagaraj

Karthi Kaithi Release on Sept 27 Lokesh kanagaraj

இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இந்த படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.இதே தேதியில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படமும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதனால் ஒரு ஆரோக்கியமான போட்டியை தமிழ் சினிமா காணவுள்ளது.