தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் வெற்றி, 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் வெற்றி நடிப்பில் இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெளிவந்த ஜீவி திரைப்படமும், கடந்த ஆண்டு மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த வனம் திரைப்படமும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. அடுத்ததாக இயக்குனர் ஷியாம் பிரவீன் இயக்கத்தில் வெற்றி நடித்துவரும் மெமரிஸ் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

மேலும் வெற்றி நடிப்பில் உருவான ரெட் சாண்டில் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்ததாக தற்போது ஜோதி, தீங்கிரை மற்றும் கண்ணகி ஆகிய திரைப்படங்களிலும் நடிகர் வெற்றி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் வெற்றிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக மிக நெருங்கிய உறவினர்களோடு திருநெல்வேலியில் நடிகர் வெற்றியின் திருமணம் தற்போது நடைபெற்றுள்ளது. நடிகர் வெற்றியின் திருமணத்திற்கு திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் வெற்றியின் திருமண புகைப்படம் இதோ…
8 thottakkal movie fame actor vetri gets married