ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.தனது முதல் படத்திலேயே வெற்றிகண்ட இந்த இளைஞர் பலரையும் கவர்ந்திருந்தார்.அடுத்ததாக தளபதியுடன் தெறி,மெர்சல்,பிகில் என்று தனது ஒவ்வொரு படத்திலும் புதிய உச்சம் தொட்டார்.

4 Years of Theri Atlee Emotional Note Vijay

இன்றோடு தெறி படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.விஜய்,சமந்தா,எமி ஜாக்சன்,ராதிகா,இயக்குனர் மஹேந்திரன்,மொட்ட ராஜேந்திரன்,நைனிகா என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.

4 Years of Theri Atlee Emotional Note Vijay

ரசிகர்களின் ஆதரவோடு வசூல்வேட்டை நடத்திய இந்த படம் குறித்து ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.தற்போது இயக்குனர் அட்லீ இந்த படம் குறித்து பதிவிட்டுள்ளார்.தெறி எனக்கு மிகவும் பிடித்த நெருக்கமான படங்களில் ஒன்று இந்த படம் நடக்க முழு முக்கிய காரணமாக இருந்த விஜய் அண்ணனிற்கு நன்றி நீங்கள் இல்லாமால் இது எதுவும் நடந்திருக்காது என்று தெரிவித்த அட்லீ தனது தெறி படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர் தாணுவிற்கும் நன்றி தெரிவித்து உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.