தமிழ் சினிமாவின் மீது தீரா காதல் கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா.படத்திற்கு படம் ஒரு வித்தியாசம் என்று மக்களின் மனம் கவர்ந்த இந்த சிங்கத்தின் வசூல் வேட்டையில் முக்கியமான நாள் இன்று.28 மே 2010 சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிங்கம்.

10 Years of Suriya Blockbuster Hit Singam Hari

சூர்யாவிற்கு மிகப்பெரிய கமர்சியல் வெற்றி பெற்று தந்த திரைப்படம்.சூர்யாவை முன்னணி நடிகர்களின் ரேஸில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற திரைப்படம்.சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோஷன் என்று எல்லாமே இந்த படத்திற்கு அமைந்து வந்தது.இயக்குனர் ஹரியின் வேகத்தோடு சூர்யாவின் எனர்ஜியும் ஒன்று சேர படம் பட்டிதொட்டி எங்கும் பட்டாசாய் வெடித்தது.

10 Years of Suriya Blockbuster Hit Singam Hari

இன்றும் சூர்யாவின் அந்த சிங்கம் மீசை செம ட்ரெண்டில் உள்ளது.நேர்மையான ஆத்திரகார போலீசாக சூர்யாவின் நடிப்பு.பிரகாஷ் ராஜ் போன்ற ஒரு வில்லன்.அனுஷ்கா,விவேக்,ராதாரவி,நாசர்,மனோரமா என்று பக்கா குடும்பத்து படமாக இந்த படம் இருந்தது.தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பக்கபலமாக இருக்க சிங்கம் சிங்கம் என்று அவர் BGM போட திரையரங்குகள் அதிர்ந்தது.

10 Years of Suriya Blockbuster Hit Singam Hari

விஜய்,அஜித் போன்றவர்கள் இந்த சமயத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க சூர்யா சிங்கத்தின் வேகத்தோடு ரேஸில் முன்னேறினார்.2010-ல் எந்திரனுக்கு அடுத்தபடியாக வசூல் வேட்டை நடத்திய படம் சிங்கம் தான்.ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.இரண்டாம் பாகம் எடுத்து அதில் வெற்றி கண்ட சில தமிழ் படங்களில் ஒன்று சிங்கம்.இதன் மூன்றாவது பாகம் பெரிய வெற்றிபெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.விறுவிறுப்பான திரைக்கதை,அதிரடியான வசூல் என்று எல்லாமே சிங்கம் படத்திற்கு கிடைத்திருந்தது.இந்த படத்தின் வசனங்கள் பலவற்றும் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளன.

10 Years of Suriya Blockbuster Hit Singam Hari

இன்றும் இந்த படத்தை டிவியில் ஒளிபரப்பினால் அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து பார்ப்பார்கள்.சிங்கம் என்ற அந்த சீரிஸில் இந்த படம் தான் சிறந்த படம் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.பத்து வருடங்கள் கழித்தும் இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடுவது தான் இந்த படத்தின் உண்மையான வெற்றி.இந்த கூட்டணி மீண்டும் அருவாவில் இணைகிறது,இந்த படமும் மாபெரும் வெற்றியடைய கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

சிங்கம் - ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்