19 வயது இளம் பெண்ணை மிரட்டியே 18 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் அதுவும் மயிலாடுதுறையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மயிலாடுதுறை அடுத்து உள்ள திருமணஞ்சேரி ஜெ ஜெ நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் 18 வயதான அரவிந்த் குமார், அந்த பகுதியில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி திறந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதே போல், இவரது அருகில் இருக்கும் ஒரு வீட்டில் 10 ஆம் வகுப்பு படித்து 19 வயதான இளம் பெண் ஒருவர், தனத பெற்றோருடன் தனது வீட்டில் இருந்து, பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த 19 வயதான இளம் பெண் மீது, அந்த 18 வயது இளைஞனுக்கு ஒரு கண் இருந்து உள்ளது. அந்த இளம் பெண்ணின் அழகில் மயங்கிய அந்த இளைஞன், அந்த பெண்ணை பல நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

அதன் படி, கடந்த 31 ஆம் தேதி இரவு அந்த பெண் தனது வீட்டிலிருந்து உறவினர் ஒருவரின் வீட்டு திருமணத்திற்கு தன்னந் தனியாக நடந்துச் சென்றுக்கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, அந்த பெண்ணை பின் தொடர்ந்துக்கொண்டே அந்த 18 வயதான அரவிந்த் குமார் வந்திருக்கிறார். அந்த பெண், அந்த ஊரில் எல்லைப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத மற்றும் லைட் வெளிச்சம் இல்லாத பகுதியில் அந்த பெண் நடந்து வந்துக்கொண்டிருந்த போது, அந்த 19 வயது பெண்ணை, வாயை மூடி, மிரட்டியே அருகில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். 

அங்கு வைத்து, அந்த இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த இளைஞன், அந்த பெண்ணை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனையடுத்து, “இது குறித்து வெளியே எதுவும் சொல்லக்கூடாது என்றும், மீறி சொன்னால் உன்னை கொன்று விடுவேன்” என்றும், மிரட்டி விட்டு, அந்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளான்.

இதனால், கடும் அதிரச்சியடைந்த அந்த இளம் பெண், திருமண நிகழ்விற்கு செல்லாமல் தனது வீட்டிற்கு திரும்பி வந்து அழுதுகொண்டே இருந்துள்ளார்.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின்  சகோதரி வந்ததும், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து, கூறி அதறி அழுது உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி, இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அரவிந்த் குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்று, நீதிமனற்த்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவு படி, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.