பக்கத்து வீட்டில் உள்ள குளியல் அறையில் வெப்கேம் வைத்து, அந்த வீட்டின் மனைவி மற்றும் மகள் குளிப்பதை, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பார்த்து ரசித்து வந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ மகனை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

தஞ்சாவூரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தஞ்சாவூர் தெற்கு வீதி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷன் என்ற இளைஞர், அங்குள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். 

தனது குடும்பத்துடன் வசித்து வரும் வெங்கடேஷன் வீட்டில் கடந்த 20 ஆம் தேதி வெள்ளிக் கிழமை இரவு, வீட்டில் உள்ள குளியல் அறையில் ஏதோ மின்னுவது போல் இருப்பதை வெங்கடேஷின் மனைவி கவனித்து உள்ளார். 

இதனால், சந்தேகம் அடைந்த அந்த பெண், தனது கணவரிடம் இது குறித்து கூறியதுடன், அவரை அழைத்து வந்து அதனை காட்டியிருக்கிறார்.

இதனையடுத்து, வெங்கடேஷன் உடனடியாக குளியலறைக்குச் சென்று பார்த்த போது, அந்த அறையில் ஒரு வெப் கேமரா இருந்து உள்ளது.

அத்துடன், அந்த வெப் கேமரா சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர்பேங்க் உடன் அது இணைக்கப்பட்டு இருந்திருக்கிறது.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த வெங்கடேஷன், இது தொடர்பாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்திய போலீசார், வெங்கடேஷின் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 35 வயதான நசீர் அகமது என்பரைக் கைது செய்தனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து வெங்கடேஷன் கூறும்போது, “எனது வீட்டின் அருகில் இருப்பவர் தான் நசீர் அகமது” என்று, குறிப்பிட்டார்.

“அவரின் தந்தை ஓய்வு பெற்ற முன்னாள் காவல் ஆய்வாளர் என்றும், அவரின் மனைவி அரசு ஊழியர் என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளும், மனைவியும் குளிப்பதை, நசீர் மாடியில் இருந்து பார்த்து வந்தார் என்றும், இது குறித்து அவரது தந்தையிடம் சொன்ன போது, எங்களிடம் அவர் சண்டைக்கு வந்தார்” என்றும், கூறினார்.

மேலும், “எனது வீட்டின் பின்புறம் குளியலறை இருப்பதால், அந்த குளியலறை ஒட்டிய இன்னொருவருக்குச் சொந்தமான காலி வீடு ஒன்று உள்ளது என்றும், அந்த வீட்டின் உரிமையாளர், வீட்டைப் பார்ப்பதற்கு யாராவது வந்ததால், வீட்டைச் சுற்றி காட்டுவதற்காக, வீட்டின் சாவியை நசீர் அகமதுவிடம் கொடுத்து வைத்திருந்தார் என்றும், இதனைப் பயன்படுத்தி காலியாக உள்ள வீட்டின் குளியலறை கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள எனது குளியலறையின் மேல வெப்கேமராவைப் பொருத்தி உள்ளார்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

“இதன் மூலமாக, என் மனைவி மற்றும் மகள் குளிப்பதை அவர் ரசித்து வந்திருக்கிறார் என்றும், தற்போது அவர் மீது புகார் அளித்து உள்ளோம்” என்றும், அவர் கூறினார்.

இது தொடர்பாக அவரை கைது செய்துள்ள போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.