யுவர் பேக்கர்ஸ் அறக்கட்டளை பற்றிய குறிப்புகள்:

யுவர் பேக்கர்ஸ் அறக்கட்டளை ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். (பிரிவு 8) நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ், பின்தங்கிய, சமூக ரீதியாக ஏழை அல்லது குறைந்த வருமானம் கொண்ட துறைகளை ஊக்குவிக்கும் அர்த்தமுள்ள நோக்கத்துடன் புதுச்சேரியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திலிருந்து செயல்படுகிறது. எங்கள் திட்டங்கள் மற்றும் இலக்குகளானது ஒவ்வொரு நாளும் சமூக, தனிநபர் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இயக்கப்பட்டு, ஒரு விவேகமான நகர்வை மேற்கொள்ள தூண்டுவதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

Yourஎண்ணம்:

யுவர் பேக்கர்ஸ் அறக்கட்டளையானது ஒவ்வொரு தகுதியான நபருக்கும் சமமான தளத்தை உருவாக்கி வழங்குவதற்கான உன்னதமான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது. சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதில் அர்ப்பணிப்பும், உறுதியும் கொண்டு மனரீதியாகவும், சமூக ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒரே மாதிரியான எண்ணம் கொண்டவர்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது எங்கள் குழு.

ஒரு மாற்றத்தை கட்டவிழ்த்துவிட வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்துடனும் நோக்குடனும், ஒரு நபர், ஒரு மாணவர், ஒரு பெண் அல்லது ஒரு ஆண், அவர்களின் கனவுகளை அடையத் தடையாக உள்ள வெளிப்படையான இடைவெளியைக் குறைக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.

"தனது கனவுகளை அடைய முனைபவர்களிடமே எதிர்காலம் உள்ளது" என்பதை யுவர் பேக்கர்ஸ் ஆழுந்து நம்புகிறது.

your b

நோக்கம்:

யுவர் பேக்கர்ஸ் அறக்கட்டளை அதன் தொடக்கத்தில் இருந்தே சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர கடுமையாக உழைத்து வருகிறது. சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்கும், சமூகம் மற்றும் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவரும் கல்வியை எளிதில் அணுகுவதற்கும் அதிக உந்துதல் மற்றும் அர்ப்பணிப்புள்ள நபர்களைக் கொண்ட குழுவுடன் ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி அதனை அடித்தளமாகக் கொண்டு செயல்படுகிறோம்.

கல்வி, காடு வளர்ப்பு, தொழில் முனைவோர், உணவு விநியோகம், மருத்துவப் பராமரிப்பு, கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் பிறவற்றின் தொடர் பிரச்சாரங்களுடன், யுவர் பேக்கர்ஸ் உணர்வு பூர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் மக்கள் மனதளவில் வலுவாக உணரக்கூடிய காலநிலையை உருவாக்கி வருகின்றனர். எங்களின் அனைத்து பணிகளும் எங்களின் மூன்று அடிப்படைக் கொள்கைகளான "தொண்டு, பொறுப்புக்கூறல் மற்றும் நிலைத்தன்மை" ஆகியவற்றைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிறுவனர் செய்தி:

புதுச்சேரி என்கிற சிறிய நகரத்தைச் சேர்ந்த நான் ஒரு கூட்டு கலாச்சாரத்தில் வளர்ந்தவன். என் வாழ்நாள் முழுவதும் நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளில் ஆழ்ந்து புதையுண்ட நான், "தொண்டு வீட்டிலிருந்து தொடங்குகிறது" என்பதை தீவிரமாக நம்பினேன். எனது நினைவுக்கூறத்தக்க நாட்கள் முதலே என்னைச் சூழ்ந்திருந்த வேதனைகளையும், நடந்த சமூக அநீதிகளையும் நான் உணர்ந்ததில்லை. சமூகத்தைப் பற்றி ஒரு மகிழ்ச்சியான பிம்பம் மட்டுமே எனக்கு இருந்தது.

ஆனால் கொரோனா தொற்றுநோய் என்னை மனதளவிலும், உடல் அளவிலும் வெகுவாக தாக்கியது. மக்களின் விரக்தியும் கஷ்டங்களும் என்னை மிகவும் பாதித்தன. மக்களின் ஆதரவற்றத் தன்மை, சமூகத்திற்கான எனது பங்களிப்பை கேள்விக்குள்ளாக்கியது. அதுவே சமூகத்தைப் பற்றிய எனது பார்வையை மறுபரிசீலனை செய்ய தூண்டுதலாக அமைந்தது.

திரு. கிருஷ்ணராஜு - குழுவினர் செய்தி:

"மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்று நம்பும் ஒத்த எண்ணம் கொண்ட குடும்பம் நாங்கள்.

ஒரு நேரத்தில் ஒரு அடி எடுத்து வைத்து, சமூகத்தை எந்த தப்பெண்ணங்களும் இல்லாத ஒரு சிறந்த இடமாக மாற்ற விரும்பும் உணர்ச்சிமிக்க மனிதர்களாக அறியப்பட விரும்புகிறோம்.

எங்கள் பிரச்சாரங்கள் மற்றும் சிறிய மனிதாபிமானமிக்க செயல்கள் மூலம், மக்கள் முகத்தில் மீண்டும் புன்னகையைக் காண முடிந்தது. அவர்களின் முகத்தில் இருந்த புன்னகை எங்களுக்கு ஆழ்ந்த அமைதியைக் கொடுத்தது, அதிலிருந்து யுவர்பேக்கர்ஸ் அறக்கட்டளையில் இருந்து சாதாரண விஷயங்களையும் நாங்கள் அதிகப்படியான அன்புடன் செய்து வருகிறோம்.

பிரச்சாரங்கள்:

●    கடல் தூய்மைப்படுத்தும் பிரச்சாரம்

●    கடற்கரை சுத்தம் செய்யும் பிரச்சாரம்

●    உணவு விநியோக பிரச்சாரம்

●    காடு வளர்ப்பு பிரச்சாரம்

●    சைபர் விழிப்புணர்வு பிரச்சாரம்

கடல் தூய்மைப்படுத்தும் பிரச்சாரம்:

பரவலான நகர்ப்புற பயன்பாடு மற்றும் மனித பயன்பாட்டின் காரணமாக கடலின் சுற்றுச்சூழல் சீர்குலைந்து வருகிறது. பொறுப்புக்கூறல் மற்றும் நிலைத்தன்மை என்ற எங்களின் குறிக்கோளுக்கு உறுதியளிக்கும் வகையில் யுவர்பேக்கர்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த நாங்கள்,

எங்கள் தன்னார்வலர்களுடன் சேர்ந்து, "கடல் சுத்தப்படுத்தும் பிரச்சாரத்தை" மேற்கொண்டுள்ளோம், இதன் கீழ் 

(1) மீன்பிடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்டப் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

(2) துறைமுகம்/கடற்படை கப்பல்கள் பிளாஸ்டிக்கைக் கொட்டுவதைத் தடுக்கப்பட்டுள்ளது.

(3) மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக கடல்வாழ் உயிரினங்களின் தரத்தை மேம்படுத்தியுள்ளோம்.

கடற்கரை துப்புரவு பிரச்சாரம்:

சுற்றுலா மற்றும் சமச்சீர் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதே கடற்கரையை சுத்தப்படுத்துவதன் முக்கியத்துவம் என்று சர்வதேச மற்றும் தேசிய மன்றத்தால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் சுட்டிக்காட்டும் விளைவுகள் மற்றும் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டு, யுவர்பேக்கர்ஸ் அறக்கட்டளையில் நாங்கள் மிகவும் பாராட்டப்பட்ட "கடற்கரை சுத்தம் செய்யும் பிரச்சாரத்தை" மேற்கொண்டுள்ளோம். அதனடிப்படையில்

(1) புதுச்சேரியில் மேலும் சில "நீலக் கொடி" கடற்கரைகளை உருவாக்கியுள்ளோம் (ஈடன் கடற்கரை போன்று)

(2) சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது

(3) பிளாஸ்டிக் மற்றும் இரசாயன சேர்க்கை இல்லாதவாறு நீர் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளோம்

உணவு விநியோக பிரச்சாரம்:

உணவு விநியோகம் என்பது உணவு உற்பத்தி மற்றும் அதனை தயார்படுத்துதல் போன்றே முக்கியமானது. அது நாளுக்கு நாள் மிகவும் முக்கியமானதாகவும் மாறி வருகிறது. கோவிட் தொற்றுநோயின் வருகை நாம் இதுவரை பார்த்திராத ஒரு புரிதலைக் கொண்டு வந்தது. மக்களின் உதவியற்ற நிலை, யுவர்பேக்கர்ஸ் அறக்கட்டளையில் எங்களை ஊக்கப்படுத்தியது. அதன்படி

(1) விரைவில் அழுகக்கூடிய பொருட்களின் விவசாயக் கழிவுகள் வீணாவதைத் தடுக்கவும்

 (2) உணவைப்  பெறுவதற்கான இடைவெளியைக் குறைக்கவும்

(3) பசியில் வாடும் உள்ளூர் மக்களின் விகிதத்தைக் குறைக்கவும்

இவையே நாங்கள் "உணவு விநியோக பிரச்சாரத்தை" தொடங்க காரணமாக அமைந்தது.

காடு வளர்ப்பு பிரச்சாரம்:

புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பசுமையான வனப்பகுதிகள், அங்கீகரிக்கப்படாமலும் மனித நடமாட்டத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் சுற்றுச்சூழலின் பன்முகத்தன்மையை பாதித்தது மட்டுமல்லாமல் கார்பன் தடயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, யுவர்பேக்கர்ஸ் அறக்கட்டளையில் நாங்கள் "காடு வளர்ப்பு பிரச்சாரத்தை" தொடங்கினோம், அதன் கீழ் நாங்கள் விரும்புவது

(1) புதுச்சேரியின் பசுமைச் சூழல் அதிகரிப்பு

(2) மியாவாக்கி காடு வளர்ப்பு கொள்கையை செயல்படுத்துவது

(3) காற்றின் தரத்தை மேம்படுத்துதல், நீடித்த சூழலியல் மற்றும் பாதுகாக்கப்பட்ட / பிற்போக்கான நீண்ட காலநிலை மாற்றம்.

சைபர் விழிப்புணர்வு பிரச்சாரம்:

நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம்; வேலைகள் முதல் கல்வி வரை அனைத்தும் ஒரு சில கிளிக்குகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஒவ்வொரு நாளும், ஆன்லைன் மோசடி செய்பவர்களின் அறிக்கைகள் அதிகரித்து வருகின்றன. யுவர்பேக்கர்ஸ் அறக்கட்டளையில் உள்ள நாங்கள் "தகவல்கள் தான் புதிய தங்கம்" என்று நம்புகிறோம், எனவே நாங்கள் "பேஸ்புக்/ஆன்லைனில் மோசடி செய்பவர்கள் பற்றிய பிரச்சாரத்தை" மேற்கொண்டுள்ளோம். அதன்படி

(1) தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி ஆதாரங்கள் திருடப்படுவதுத் தடுக்கப்பட்டுள்ளது

(2) முறையான நபர்களை அடையாளம் கண்டு அவர்களை மோசடி செய்பவர்களிடமிருந்து வேறுபடுத்தியுள்ளோம்

(3) இணையப் பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளோம்

தொடர்புக்கு:

எங்கள் பயணத்தில் இணையுங்கள்!

ஒன்றாகப் பங்களிப்போம்!

அலுவலகம்: எண்.140, முதல் தளம், கிழக்கு கடற்கரை சாலை, அரியாங்குப்பம், புதுச்சேரி- 605007. தொலைபேசி: +91 7092245105 இணையதளம்: www.yourbackers.org மின்னஞ்சல்: contact@yourbackers.org  IG: @yourbackersfoundation