ராமநாதபுரத்தில் “உன் மனைவியின் ஆபாச படத்தை அனுப்பு” என்று ஒரு இளைஞன் ஒருவன் மிரட்டிய நிலையில், அவரது கணவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர், தன் மனைவியுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனை ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்த மயிலாடுதுறை காமராஜர் சாலையை சேர்ந்த 28 வயதான சிவா என்ற இளைஞன், அந்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள அந்த பெண்ணின் படத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மிகவும் ஆபாசமாக மார்பிங் செய்துள்ளார். 

இதனையடுத்து, அந்த ஆபாசப் படத்தை ரசித்த சிவா, ஊராரும் ரசிக்க வேண்டும் என்ற வக்கிர புத்தியில், மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்த அந்த பெண்ணின் படத்தை, தன்னுடைய மற்றொரு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவன், அந்த ஃபேஸ்புக் கணக்கின் அட்மினை தொடர்பு கொண்டு, “நான் தான் அந்த குறிப்பிட்ட பெண்ணின் கணவன். தயவு செய்து, அந்த படத்தை நீக்குங்கள் ப்ளீஸ்” என்று, கூறி வேண்டி உள்ளார். அதன் படி, அந்த படம் குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

ஆனால், அடுத்த நாளே அதே படம் மற்றொரு ஃபேஸ்புக் பக்கத்தில் அதே படம் பதிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், மீண்டும் அந்த ஃபேஸ்புக் கணக்கின் அட்மினை தொடர்பு கொண்டு, “அந்த படத்தை நீக்குமாறு” வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், எதிர் தரப்பில் பேசியவர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியதாகத் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவன், “நீங்கள் படத்தை நீக்க வில்லை என்றால், நான் போலீசில் புகார் அளிப்பேன்” என்று கூறி எச்சரித்துள்ளார். ஆனால், எதிர் முனையில் பேசிய நபர், “கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல்” விடுத்துள்ளார். 

குறிப்பாக, “ உன் மனைவியை ஆபாசமாகப் படம் எடுத்து அனுப்பு. இல்லை என்றால், உன் மனைவியின் இன்னும் சில படங்கள் மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்” என்றும், அவர் கடுமையாக மிரட்டி உள்ளார்.

இதனால், பயந்துபோன அந்த பெண்ணின் கணவர், என்ன செய்து என்று தெரியாமல் தவித்துள்ளார். இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண் குமாரிடம் நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த அவர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் சம்மந்தப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தை போலீசார் ஆய்வு செய்தனர். 

இதனையடுத்து, அந்த ஃபேஸ்புக் கணக்கு, மயிலாடுதுறை காமராஜர் சாலையை சேர்ந்த 28 வயதான சிவா என்பவரின் கணக்கு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் விரைந்து சென்று சிவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், “சிவா, ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர்” என்பது தெரிய வந்தது. மேலும், “மயிலாடுதுறை பகுதியில், பர்னிச்சர் கடை நடத்தி வந்த அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, “இது போன்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண்களின் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து, அதை தவறாகச் சித்தரித்து தன்னுடைய  போலியான முகநூல் பக்கத்தில் அவர் தொடர்ந்து பதிவு செய்து வந்ததும்” தெரியவந்தது. அத்துடன், “இந்த புகைப்படம் தொடர்பாகத் தொடர்பு கொண்டு பேசும் நபர்களைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளதும்” விசாரணையில் தெரிய வந்தது.

விசாரணைக்குப் பிறகு, ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சிவா மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.