காதல் என்ற பெயரில் 10 ஆம் வகுப்பு மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

நாகை அடுத்து உள்ள குத்தாலம் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னையில் தனது உறவினர் வீட்டில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்து 
வந்து உள்ளார். அப்போது, தன்னுடன் படித்த சக மாணவியின் உறவினரான மெல்வின் செல்வகுமார் என்ற இளைஞர், மாணவிக்கு அறிமுகம் ஆகி உள்ளார்.

இதனையடுத்து, அந்த மாணவியைக் காதலிப்பதாகக் கூறி, மெல்வின் செல்வகுமார் பழகி வந்து உள்ளார். ஆனால், அதன் பிறகு, அந்த சிறுமி தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில், அங்கேயே அவர் படிப்பைத் தொடர்ந்து உள்ளார். இதனையடுத்து, காதலர்கள் இருவரும் செல்போன் மூலமாகத் தொடர்ந்து பழகிப் பேசி வந்து உள்ளனர். 

அப்போது, அவ்வப்போது செல்போனில் பேசும் அந்த இளைஞன், அந்த மாணவியின் படத்தை அனுப்புமாறு கேட்டு, மெல்வின் செல்வகுமார் அடம் பிடித்ததாகத் தெரிகிறது. ஆனால், தன்னுடைய படத்தை அனுப்ப அந்த மாணவி மறுத்ததால், தன் கையை கத்தியால் கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட வீடியோ எடுத்து அதை, அந்த மாணவிக்கு செல்போனில் அனுப்பி வைத்து உள்ளார். இதனால், பயந்து பதறிப்போன அந்த மாணவி, தனது புகைப்படங்களையும், செல்ஃபிகளையும் அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்து உள்ளார். 

இப்படியாகப் போட்டோ மற்றும் வீடியோக்கள் அனுப்புவது சில நாட்கள் சென்றுக்கொண்டிந்த நிலையில், திடீரென அந்த மாணவியிடம் “ஆடைகளின்றி புகைப்படம் அனுப்புமாறு” அந்த இளைஞன் கேட்டு மீண்டும் அடம் பிடித்து உள்ளான். இதனால், அந்த சிறுமியும் வேறு வழியின்றி, தனக்கு தெரிந்தவன் தனக்குப் பிடித்தவன் தானே கேட்கிறான் என்று நினைத்து, இளைஞன் மெல்வின் செல்வகுமாரை நம்பி, தன்னுடைய அரை நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்து உள்ளார்.

இதனையடுத்து, கடந்த வாரம் அந்த மாணவியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் ஒருவர், “உங்கள் மகளின் ஆபாசப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதாக” மாணவியின் பெற்றோரிடம் கூறி அதனைக் காட்டி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். இதனால், பெரிதாக ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று பயந்து, தனது பெற்றோரிடம் சிறுமி நடந்ததைக் கூறி அழுதுள்ளார். 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளை அழைத்துக்கொண்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த இளைஞன் குறித்து புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியின் ஆபாசப் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த மெல்வின் செல்வகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அந்த மாணவியின் ஆபாசப் படங்களை இணையத்தில் அழிக்கும் வேலையிலும் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், ஜெயங்கொண்டானில் இளைஞர்கள் இருவர் காதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவிகளை கடத்திச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.