“வெறி தீராததால் உடலை பல்லால் கடித்து குதறிய காம அரக்கர்கள்” இளம் பெண்ணை பலாத்காரம் செய்து, நிர்வாண நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்து உள்ள சொரகொளத்தூர் செல்லும் வழியில் செயல்பட்டு வரும் ஒரு குறிப்பிட்ட டாஸ்மாக் கடை எதிரே காப்புக்காடு பகுதியில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாகக் கிடந்து உள்ளார். இதனை, அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

உடனடியாக, இது குறித்து அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து, சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை வந்து பார்த்தனர். 

அப்போது, படுகொலை செய்யப்பட்ட பெண், மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

முக்கியமாக, அந்த பெண் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள் காம வெறிபிடித்த மிருகம் போல், காம வெறி தலைக்கேறி அந்த பெண்ணின் உடல் பாகங்கள் முழுமைக்கும் பல்லால் கடித்து குதறி வைத்து இருக்கிறார்கள். அதற்கான அடையாளங்கள் அந்த பெண்ணின் உடலில் பல பாகங்களிலும் இருந்து உள்ளன. 

அத்துடன், அந்த பெண்ணை நிர்வாண நிலையில் வைத்தே, அந்த காம மிருகங்கள் வெறிபிடித்து வேட்டையாடி அப்படியே கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள். 

மேலும், அந்த பெண்ணின் உடல் கிடந்த இடத்தின் அருகிலேயே, உயிரிழந்த இளம் பெண் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட், மேலாடையான டாப்ஸ் உள்ளிட்ட ஆடைகளும் அந்த இடத்தில் சிதறிக் கிடந்து உள்ளன. இவற்றையும், மீட்ட போலீசார், அந்த பெண்ணின் உடலை அங்குள்ள அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முக்கியமாக இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப் படை அமைத்து, இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்து உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.