உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டரின் சபல லீலைகள் பற்றிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்துடன்,  உடற்பயிற்சி கூடங்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னையைக் கிழக்குத் தாம்பரத்தில் தனியார் உடற்பயிற்சி கூடமான ஜிம் நடத்தி வரும் பிரேம் ஆனந்த் என்பவர், அந்த ஜிம்மிலேயே பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். 

இவர், இந்த கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி, தனது உடற்பயிற்சி கூடத்தைப் பின் பக்க வாசல் வழியாக திருட்டு தனமாக நடத்தி வந்ததாகத் தெரிகிறது.

இப்படியான நிலையில், கடந்த வாரம் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பலரும் சீக்கிரமாகக் கிளம்பிச் சென்று விட்டனர். 

அப்போது, அங்கு கடைசி ஆளாக உடற்பயிற்சி செய்திருக்கொண்டிருந்த 27 வயது இளம் பெண்ணிடம், “சிறப்பு பயிற்சி அளிக்கிறேன். சிறுது நேரம் காத்திருங்கள்” என்று, பயிற்சியாளர் பிரேம் ஆனந்த், கூறியிருக்கிறார். அதன் படியே, அந்த 27 வயது இளம் பெண்ணும் அங்கேயே காத்திருந்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணுக்கு பயிற்சி அளிப்பது போல், அந்தப் பெண்ணிடம் அந்த ஜிம் மாஸ்டர் அத்துமீறலில் அத்துமீறலில் ஈடுபட்டதாகக்  கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அவரிடம் மல்லுக்கட்டிவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார்.

அத்துடன், வீட்டிற்குச் சென்ற அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இந்த சம்பவம் பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 

அதில், “தனக்கு நேர்ந்தது இந்த பாலியல் அத்துமீறல் போன்று, வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இதனை ஃபேஸ்புக்கில் பதிவிடுவதாகவும்” அந்த பெண் விளக்கம் அளித்து உள்ளார்.

இதனைப் பார்த்த அந்த ஜிம் மாஸ்டர் பிரேம் ஆனந்த், அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு சமாதானம் செய்ய முயன்றதாகத் தெரிகிறது. ஆனாலும், அது எடுக்கபடவில்லை.

மேலும், ஜிம் மாஸ்டரின் மன்னிப்பை ஏற்க மறுத்த அந்த பெண், “என்னுடைய பயிற்சிக் கட்டணத்தைத் திரும்பத் தாருங்கள் என்றும், நான் இனி அங்கு பயிற்சிக்கு வரமாட்டேன்” என்றும் கூறிவிட்டு போனை வைத்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, ஆன்லைன் மூலமாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.